கட்டாரைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவூதி அரேபியா உள்ளிட்ட 6 அரேபிய நாடுகள் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்டாரைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகளுக்காக அந்நாட்டுடனான எல்லையை திறக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக சவூதி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கட்டார் தலைநகர் தோஹாவிலிருந்து விமானங்கள் மூலம் யாத்ரீகர்களை அனுமதிக்கவும் சவூதி முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தங்களது நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கட்டார் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.