கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை(14) ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம்..

(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதினால் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளைய தினம்(14) ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை நளை(14) ஆரம்பிக்க தற்காலிகமாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்த அதேவேளை, பாதுகாப்பை கருத்திற் கொண்டு வெசாக் உற்சவம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படாலாம் என்றும் அவர் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.