கந்தளாய் குளத்தில் விழுந்த முச்சக்கரவண்டியிலிருந்து 13 பேர் மீட்பு

கந்தளாய் குளத்தில் விழுந்த முச்சக்கரவண்டியிலிருந்து 8 பாடசாலை மாணவர்கள் உற்பட 13 பேரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதில், 6 மாத குழந்தை ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் பயணித்த பேரூந்தின் தொழிநுட்ப கோளாறு காரணமாக அவர்கள் முச்சக்கரவண்டியில் தமது பயணத்தை தொடர்ந்த நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் , அந்த இடத்தில் இருந்த இளைஞர்கள் குளத்தில் குதித்து மூழ்கிக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.