கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை காவலராக தமிழர் நியமனம்

(FASTNEWS | COLOMBO) – கனடா நாட்டின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள முக்கிய நகருக்கு தலைமை காவலராக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டின் ஹால்டன் பகுதியில் துணை காவலராக பணிபுரிந்தவர் நிஷ் துரையப்பா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் நகரத்தின் தலைமை காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் திகதி பதவியேற்கவுள்ளார்.