கனடா பிரதமர் இந்தியா விஜயம்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் 6 நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.