கனடாவின் ஹொக்கி அணி வீரர்கள் 13 பேர் பலி…

கனடாவில் ஹொக்கி அணியினை அழைத்து சென்ற பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் பேரூந்தில் பயணித்த 13 ஹொக்கி வீரர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்று(06) மாலை, போட்டி ஒன்றிற்காக ஹொக்கி அணி பயணித்து கொண்டிருந்துள்ள போதே குறித்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 03 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

####