(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனுலாவினால் (cannula) ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் உயர் அதிகாரியாவார்.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கனுலாவின் (cannula) மூலம் பற்றீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கனுலா ஊடாக தொற்று நோய் கிருமிகள் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஆக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.
ஆனால், அங்கு அவர் உயிரிழந்துள்ளார். மேலும் கானுலாவில் இருந்து பற்றீரியா சென்றதால் இந்த மரணம் சம்பவிக்க காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.