கம்பஹா மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரமான கனேமுல்ல மேம்பாலம் இன்று(11) பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நடைபெறவுள்ளது.
ரயில் நிலையத்தின் காரணமாக கனேமுல்ல நகரத்தில் அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக குறித்த இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 1,700 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்டதொகையில் அமைக்கப்பட்டள்ள இந்த பாலம் 504m ஆகும். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 20 மாத காலத்திற்குள் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma