‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் சுவாரஸ்யசெய்தி ஒன்று கிடைத்துள்ளது.

தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில்,

‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஒருசேரத் தரும் வகையில் அமைந்ததாகும்.

‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ மற்றும் ஆங்கிலப் படங்களில் பாராட்டுதல்களுக்குரிய வகையில் நடித்த பூஜா குமாருடன் பணியாற்றும் அனுபவத்துக்காக எங்கள் படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது” என்றார்.