(FASTGOSSIP | COLOMBO) – சிங்கப்பூரில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்து தனது மிரிஹான இல்லத்தில் ஓய்வில் இருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நலம் விசாரிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலங்கள் இருவர் நேற்றுமுன்தினம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் கபீர் ஹஷீம் மற்றும் பிரதமரின் தலைமை பணியாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளரை சந்திக்க சென்றுள்ளனர்.
இதற்கு முன்னர் கபீர் ஹஷீம் சுகயீனமுற்றிருந்த போது கோட்டாபய ராஜபக்ஷ நலம் விசாரிக்க வந்திருந்ததாகவும் அதற்கான நன்றிக்கே கபீர் ஹஷீம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நலம் விசாரிக்க சென்றதாகவும் கூறப்படுகின்றது.
அச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
R..