(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கபீர் ஹாஷிம் இனது மகளது திருமணம் தொடர்பிலான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், அது தொடர்பில் அறிய அவரை தொடர்பு கொண்டிருந்த போதிலும் அது கைகூடவில்லை.
எனினும், கபீர் ஹாஷிமின் மகளான ஸாரா ஹாஷிம் பெளத்த மத குடும்ப ஒருவரான ஸொஹான் அல்விஸ் இனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதன்படி, குறித்த திருமண நிகழ்வு மிகவும் விமர்சையாக கடந்த 10ம் திகதி பிரபல ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இதில் அரசியல் உறுப்பினர்கள் என பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.








