சேவை அவசியம் கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 13 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
நிட்டம்புவ தலைமையகத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய ஏ.ஏ.டப்ளியூ.ஜே.எஸ். அபேகோன் அமைச்சர் கபீர் ஹாஷிமின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுக்கை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பீ.கே. பெரேரா கொழும்பு சாதாராண அலுவலக நடவடிக்கைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளார்.
மனிப்பாய் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய டீ.ஆர். மஹேஷ் பாதுக்கை நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எச்.ஜீ.என். தேவப்பிரிய மனிப்பாய் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனமல்வில நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜீ தீபால் ஹிரிபாவ நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிரிபாவ நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய யூ.கே.என்.ஜயவீர கொழும்பு சாதாராண அலுவலக நடவடிக்கைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளார்.