கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன், மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, ஒருவரைக் காணவில்லை எனவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.