கமநல சேவை மற்றும் விவசாயத் திணைக்களங்களின் அனைத்து உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இன்று(21) முதல் மறுஅறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளியு எம்.டப்ளியு. வீரகோன் தெரிவித்தார்.
சேனா படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து உத்தியோகத்தர்களும் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திணைக்களங்களை சேர்ந்த கள உத்தியோகத்தர்கள் தமக்குரிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆவண செய்ய வேண்டும் என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளியு எம்.டப்ளியு. வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார்.