(FASTNEWS|COLOMBO) – மின்சார சபையின் நிர்மாணப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பிரதேசங்கள் சிலவற்றுக்கு எதிர்வரும் ஞாயிறு(09) காலை 08.00 முதல் இரவு 08.00 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, களனி, பேலியகொடை, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு உள்ளிட்ட குறித்த பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.