(FASTNEWS|COLOMBO) – கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிட நிறமான பணிகள் நடைபெற்று வந்தது.
குறித்த இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 22ம் திகதி ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென குறித்த கட்டிடம் சில நொடிகளில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 7 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.