பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பிலவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றினால் அழைப்பாணை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா பிரஜைக்கு உரித்தான தனியார் நிறுவனமொன்றின் பங்குகளை முறைகேடு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டு உதய கம்மன்பிலவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இந்தக் கொடுக்கல் வாங்கலினால் 20 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.