கரதியான ஆர்ப்பாட்டத்தை தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு..

கரதியான குப்பை கொட்டும் பகுதிக்கு அருகில் நாளை(22) நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிலியந்தலை காவற்துறை, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய குறித்த இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கரதியானவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொரலஸ்கமுவ காவற்துறையும், கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவை பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)