கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஊரகஸ்மங்சந்தி, கொரகின பிரதேசத்தில் நேற்றிரவு(08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.