அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை தாக்க கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி புயல் மிகவும் வலுவடைந்திருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் கரீபியன் தீவான டொமினிகாவை கடக்கும் என்றும் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பலத்த காற்றுடன் கடும் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள தெர்விக்கின்றன.
குவாதலூப், மர்த்தினிக், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், மான்செராட், போர்ட்டோ ரிகோ ஆகிய தீவுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.