மரியா புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளுக்கு இந்திய அரசின் சார்பில் அவசர நிவாரண உதவித்தொகையாக 2 லட்சம் டாலர் வழங்கப்படும் என சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
வடஅமெரிக்கா அருகே உள்ள கரீபியன் கடல் பகுதியில் உள்ள டொமினிகா என்ற தீவு நாட்டை சமீபத்தில் மரியா புயல் கடுமையாக தாக்கியது.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 லட்சம் டாலர் நிதி உதவி வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.