கருணாவின் அம்பலங்கள்

கருணா தெரிவித்து வரும் கருத்துக்கள் , தென்னிலங்கையில் சில தாக்கத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளது. தமிழர் பகுதிகளில் இவரது பருப்பு வேகவில்லை என்பது ஒருபுறம் இருக்க , சிங்களவர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

எப்படியாவது மகிந்தரை வெல்லவைக்க வேண்டும் என்று அலைந்து திரியும் குழு ஒன்று , மைத்திரியோடு நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளது.

கருணாவுக்கும் தனக்கு இனி தொடர்பே இல்லை நான் கருணாவை விட்டு பிரிந்துவிட்டேன் என்று மகிந்தர் தெரிவித்துள்ளதாக அக் குழு ஒரு கட்டத்தில் தெரிவித்துள்ளது. இதனால் மகிந்த பக்கம் ஆதரவாக இருந்த பலர் கொடுத்துவந்த ஆதரவை கருணா இழந்து 48 மணி நேரம் ஆகிறது என்கிறார்கள்.

அது போக 2009ம்ல் யுத்த வெற்றிக்குப் பின்னர்.

மகிந்த ராஜபக்ஷ தனது கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவியை கருணாவிற்கு வழங்கி, தனது நன்றியை காண்பித்தார்.

ஆனால் இப்போது அந்தப் பதவியும் ரகசியமாகப் பறிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். குறித்த பதவிக்கு இதுவரை யாரையும் நியமிக்கவில்லை என்றாலும் , சுதந்திரக் கட்சியில் செல்லாக் காசாக மாறிவிட்டார் கருணா.

இவை அனைத்தையும் விட பெரிய பகிடி என்னவென்றால் சுதந்திரக் கட்சி அலுவலகத்தினுள் சென்ற இவரை காவலாளிகள் சிலர் அனுமதிக்கவில்லை என்பது தான். தனது அறையில் சில முக்கியமான பைல் இருப்பதாகவும் அதனை எடுத்துச் செல்லவே தான் வந்ததாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

ஆனால் காவலாளிகள் எதற்கும் மசியவில்லை. இது “ஐயா” வோட உத்தரவு என்று கூறிவிட்டார்கள். அவர்கள் ஐயா என்று வழமையாக அழைப்பது மகிந்தரை தானாம். இதனால் மேலும் கடும் ஆத்திரமடைந்த கருணா கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதியில் , ரூம் போட்டு அங்கே இருந்து ஐக்கிய தேசிய கட்சி(ரணிலுக்கு) தூது அனுப்பியுள்ளார்.

அதுவும் சமாதான காலத்தில் புலிகளை சந்திக்க வந்து சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் சில பிரமுகர்கள் ஊடாகவே இந்த சமாதான முயற்ச்சி நடந்துள்ளது. ஆனால் இதனை அறிந்துகொண்ட புலம்பெயர் சமூகம் ,ரணில் தரப்பை எச்சரிக்க. கருணாவை நான் கடைசிவரை இணைத்துக்கொள்ள மாட்டேன் என்று கையில் அடித்து சத்தியம் செய்துவிட்டார் ரணில்.

இதுபோக கொழும்பில் உள்ள் “பான் ஏசியா” என்னும் வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கை திறந்து பெரும் பணத்தை போட்டு வைத்திருந்துள்ளார் கருணா.

இவை அனைத்தும் 2009ம் ஆண்டு டிசம்பரில் கோட்டபாயவால் , (புலிகளை வென்றதற்காக கொடுக்கப்பட்ட நன்கொடை) கொடுக்கப்பட்ட நிதி ஆகும்.

இதனை தற்போது பிரித்து வேறு வங்கிகளுக்கு மாற்றும் செயலில் கருணா ஈடுபடுகிறார்