கண்கள் நமக்கு மிக முக்கியமான உறுப்பு. கண்களில் ஏற்படும் பாதிப்புகளினால் முக அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்கின்றனர்.
கண்களைப் பாதுகாக்க நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். நம்மை கலக்கமடைய செய்யும் இத்தகைய பாதிப்பில் இருந்து எளிய வழிகளில் குணம் பெற சில வழிகளைப் பார்ப்போம்.
ஐஸ்:
ஐஸ் கண்களில் ஏற்படும் கருமைக்கான அறிகுறிகளைக் குறைக்கிறது. ஐஸ் கண்களின் கீழே உள்ள சேதமடைந்த ரத்தக்குழாய்களை சரி செய்து, அவற்றை மரத்துப் போகச்செய்து, வலியைக் குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ் கட்டி வீக்கத்தையும் குறைக்கும். கண்களைச் சுற்றி ஐஸ் ஒத்தடம் கொடுப்பது கண்களை பாதுகாக்க மிகவும் பயனுள்ள முறையாகும்.
கற்றாழை ஜெல்:
கற்றாழையில் உள்ள குணமாக்கும் தன்மை மற்றும் அழற்சியை அழிக்கும் பண்புகள் அழற்சியையும் வீக்கத்தையும் குறைத்து, இரத்த நாளங்களை சரி செய்து கண்களைச் சுற்றி ஏற்படும் கரும்படலத்தை குணமாக்குகிறது. பிரெஷான கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள தோலின் மீது மென்மையாக தடவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்யும் போது கரும்படலத்தின் அடர்த்தி குறைந்து விடும்.
பப்பாளி கூழ்:
பப்பாளி நம் சருமத்திற்கு நன்மை செய்யும் மிக அற்புதமான படைப்பு. பப்பாளி கூழில் உள்ள பயனுள்ள என்ஜைம்கள் சரும ஆரோக்கியத்தை பேணுவதில் வல்லவை. கண்களின் கீழே ஏற்படும் வீக்கத்தையும், கரும்படலத்தையும் மட்டுமல்லாமல் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களையும் சரி செய்து தோலில் ஏற்படும் ரத்தப் போக்கை குணமாக்குகிறது. பப்பாளி கூழை கண்களின் கீழே உள்ள தோலில் தடவி நாம் இத்தகைய அற்புத நன்மைகளைப் பெறலாம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணையில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது கண்களைச் சுற்றி உள்ள கரும்படலத்தினால் ஏற்படும் அழற்சி மற்றும் வலியைப் போக்குகிறது. இது கண்களின் கீழே ஏற்படும் வெடிப்பையும் சரி செய்கிறது. மேலும் தோலுக்கு ஈரத் தன்மையை தந்து தோலை மிருதுவாக்குகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் தடவுவது தோலுக்கு மிகவும் நல்லது.