கரையோர புகையிரத சேவைகளில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  காலி) – பெலியத்தையிலிருந்து பயணித்த புகையிரதம் காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக காலி புகையிரத நிலைய கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

இதனால் கரையோர புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.