(FASTNEWS | COLOMBO)– களுத்துறை பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டமையினால் கரையோர ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.40 மணியளவில் மாத்தறை இலிருந்து வவுனியா நோக்கி செல்லும் ரஜரட்ட ரெஜின கடுகதிப் புகையிரதமானது தனது பயணத்தினை களுத்துறை வரைக்கும் மட்டுப்படுத்தியுள்ளது.
மேலும், காலை 10.35 மணியளவில் கொழும்பு – கோட்டை இலிருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்கும் புகையிரதமானது இன்றைய தினம் காலி – மாத்தறை இடையே சேவையில் ஈடுபடாது என்றும், பயணமானது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து களுத்துறை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.