கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது (UPDATE)

எரிபொருள் ஏற்றிவந்த ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பலப்பிட்டிய பகுதியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் எரிபொருள் ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டதால், கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அளுத்கமைக்கும் பலபிட்டியவுக்கும் இடையில் விசேட பஸ் சேவையொன்றும் நடத்தப்பட்டது. தற்போது, ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.