மொரட்டுவை ரயில் நிலைய சமிஞ்சையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கரையோர ரயில்வே சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
குறித்த காரணத்தினால் கரையோர பாதை ஊடான ரயில்கள் வழமைக்கு மாறாக தாமதித்து செல்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சமிஞ்சை கோளாறினை சரி செய்வதில் துரிதம் நிலவுவதாகவும் குறித்த அறை குறிபிட்டுள்ளது.