கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் பிறந்த குழந்தை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைப்பு

கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் குறைப் பிர­ச­வத்தில் பிறந்த குழந்­தை­யொன்று அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர்­பி­ழைத்து ஆரோக்­ கிய நிலையை அடைந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற் றுள்ளது.

கிழக்கு யோர்க் ஷியரில் ஹல் எனும் இடத்தைச் சேர்ந்த ஸ்டெபனி (34 வயது) மற்றும் ஜேம்ஸ் (38 வயது) தம்­ப­திக்கு பிறந்த மோலி பெரின் என பெயர் சூட்­டப்­பட்ட குழந்­தையே இவ்­வாறு உயிர் பிழைத்­துள்­ளது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அந்தக் குழந்தை பிறந்த போது அதன் நிறை ஒரு இறாத்தல் ஒரு அவுன்ஸ் மட்­டு­மே­யாகும். அச்­ச­மயம் அந்தக் குழந்­தையின் கை அத­னது தந்­தையின் திரு­மண மோதி­ரத்­தி­னூ­டாக நுழையக் கூடிய அளவில் மிகவும் சிறி­தாக இருந்­தது.

இதன்­போது மருத்­து­வர்கள் அந்தக் குழந்தை 3 வாரங்­க­ளுக்கு மேல் உயிர் பிழைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை எனத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆனால் அவர்­க­ளது கூற்றைப் பொய்­யாக்கும் வகையில் ஆரோக்­கிய நிலையை அடைந்த அந் தக் குழந்தை, பிறந்து 17 வாரங்களாகின்ற நிலை யில் அதனது பெற்றோரி டம் ஒப்படைக்கப்படவுள் ளது.