கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறையில்..

கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் கர்ப்பிணித் தாய்மாரின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

குறித்த இந்தத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப் பெறும்.

இந்தத் திட்டம் மாதாந்தம் 2,000 ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக பெற வேண்டியிருந்தது.

எனவே, அதனை இலகுபடுத்தும் முகமாக கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)