42 வயதான குறித்த சந்தேக நபரை மாத்தறை சிறைச்சாலை சுற்றுவட்ட பாதையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மாத்தறை,நாவிமன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபரிடமிருந்து 9 மில்லி மீற்றர் வகை துப்பாக்கியுடன் 10 ரவைகளையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.