கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு பொருத்தமான ஒழுக்கமான முறையிலான ஆடையினை அறிமுகப்படுத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.
அதன்படி, அதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்த ஆடை வடிவமைப்பின் சுற்றறிக்கை எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சு இது குறித்து தெரிவிக்கையில், கர்ப்பிணி ஆசிரியைகள் சாறி அணியும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு ஏற்றவாறு சௌகரியமான முறையில் ஆடை வடிவொன்றினை அமைக்குமாறு தாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் அதிகாரிககள் மேலும் தெரிவித்துள்ளனர்.
(rizmira)