கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று முதல் உரிய ஆடையில் வர அனுமதி….

கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று(24) தொடக்கம் உரிய ஆடையை அணித்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்க கல்வியமைச்சால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டின் போது இலகுவான உடையொன்றை வழங்குவது தொடர்பான அத்தியாவசியத்தன்மை தொடர்பில் மருத்துவர்கள் , கல்வி அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளதை தொடர்ந்து குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சத்து 72,000 ஆசிரியைகளில் , 10,000 இற்கும் அதிகமான ஆசிரியைகள் பிரசவ விடுமுறையினை பெறுவதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.