(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டியில் விளையாடும் இலங்கை அணி வீரர்கள் மறைந்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்ஸாவினை நினைவுகூறும் வகையில், கைகளில் கறுப்பு நிற பட்டியினை அணிந்து விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.