ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.
காணாமல் போனவர்களுக்கான காரியாலயத்தை நிறுவுவது தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்னும் சொற்ப நேரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், அந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் கறுப்பு பட்டியணிந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினேஷ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜயந்த சமரவீர ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கறுப்பு பட்டி அணிந்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது.