(FASTNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவத்தை முன்னிறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் விரிவுரையாளர்கள் தொடர்ந்து கற்பிக்கும் நடவடிக்கைளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உபவேந்தர், ஒழுங்குமுறை சபை மற்றும் மாணவ சங்கத்துடனும் க நாளை கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த விரிவுரையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி நேற்று பிற்பகல் முதல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் விரிவுரையாளர்கள் கற்பிக்கும் நடவடிக்கைளில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.