(FASTNEWS|COLOMBO) – கொழும்பு கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த கெப் வண்டி மற்றும் அதனுடன் பயணித்த டிபெண்டர் வண்டியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் வேன் ஒன்று தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.