கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக 30ம் திகதி காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு சில பிரதேசத்ங்களில் அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, றுக்மல்கம, பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, கொடகம, மீப்பே, பாதுக்கை, ஹங்வெல்ல மற்றும் களுஅக்கல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் விநியோக சபை மேலும் அறிவித்துள்ளது.