கலந்துரையாடல் தோல்வி – தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு…

அமைச்சின் செயலாளருடன் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வி அடைந்தமை காரணமாக தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்விதமான தீர்வுகளும் இன்றி நிறைவடைந்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று(21) தௌிவுபடுத்த இருப்பதாகவும் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.