கலிபோர்னியா காட்டுத்தீ – உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன், 630 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது..

இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் நேற்று மேலும் 10 பிரேதங்கள் மீட்கப்பட்டதுடன், நேற்று ஒரே நாளில் 130 பேர் காணாமல் போனதாக புகார் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.