அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் தொடர்ந்து 14 காட்டுத்தீக்கள் அந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடிரென ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இரண்டே நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளது.
இந்த காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.