கலிபோர்னியா காட்டுத் தீ – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீ தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள். 1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் முழுக்க போராடினால்தான் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.

மாகாணம் முழுவதும் இந்த காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 50 ஆக உயர்ந்துள்ளதுடன் பல நூறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.