கலிபோர்னியா காட்டுத் தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காட்டுத் தீயில் சிக்கிஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.