வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டதாகவும்,
இப்பெண்ணுடன் மேலும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கல்கிஸ்ஸ பிரதேச புகையிரத நிலையத்திற்கு அருகில் 12கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் கூறியுள்ளனர்.
கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,கு
றித்த நபர் ரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்