கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கம்…

(FASTNEWS|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று(01) காலை 06 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நிலவுகின்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு(29) 08 மணி முதல் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.