கல்முனை மேயர் இரண்டாவது தடவையாகவும் பிழை செய்துள்ளார்…

கல்முனையின் பூர்வீகம் முதல் அரசியல் நுழைவு தொட்டு இன்று வரை தொடரும் வியாபார நடவடிக்கை வரை அனைத்திலும் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இணைந்து செல்லும் நிலையினையே இரண்டு சமூகத்தினரும் விரும்புகின்றனர்

விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பிரதேசத்தில் நடந்த சில வேண்டத்தகாத விடயங்களை தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்றுக் கொண்டு மனம் விட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு மனக்கிலேசத்தை கல்முனை மேயரின் செயற்பாடு கட்டியம் கூறிவருகின்றது

கடந்த வருடம் கல்முனை தெரவக் கோயில் வீதியை மாற்ற எடுத்த முயற்சியின் பின்னர் அக் கோயில் விழாக்கள் பெரிதுபடுத்தப்படுகின்ற செயற்பாடுகளை முதல்வர் அறியாமல் இருக்க முடியாது

அவ்வாறே கல்முனை பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வீதியை எம்.எஸ். காரியப்பர் வீதி என பெயரிட எடுத்த நடவடிக்கையுமாகும். சிக்கல் தன்மை வருமாக இருந்தால் பெயரை வைக்கும் முயற்சியிலிருந்து மேயர் தவிர்ந்திருக்க முடியும். அவ்வாறு செய்வதாக இருந்தாலும் சகோதர இனத்தவர்களின் அனுமதி பெற்று சபை அங்கீகாரத்தோடு செய்திருக்கலாம். எனினும் சுத்தியலால் உடைத்து விழுத்தாட வைத்ததை நாம் சரி காணவில்லை.

எனினும் அங்கீகாரம் எதுவுமின்றி மேயரால் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடுகள் தமிழ் மக்களை இன்னும் ஆவேசப்படுத்த வாய்ப்புண்டு. நல்லாட்சிக்கான காலத்தில் அரசியல் தலைமைகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 

11825779_958095167583862_9024613796118096929_n11811563_958094777583901_4841482912547499738_n

 

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=8a1SiBwbwd4&feature=youtu.be” width=”560″ height=”315″]