பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை நேற்று(03) அமுல்படுத்தாததன் காரணமாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது