2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று(08) ஆரம்பமாகின்றன.
உயர்தரப் பரீட்சைகளுக்காக இம்முறை 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றவுள்ளனர்.
பரீட்சாத்திகள் தமது அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுடன் காலை 08.00 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறும் மேலும்
கோரப்பட்டுள்ளது.
(rizmira)