கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(05)

(FASTNEWS | COLOMBO) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(05) நாடு முழுவதிலும் 2,678 மத்திய நிலையங்களில் இடம்பெறுகின்றது.

இம்முறை 3 இலட்சத்து 34,704 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றதோடு, பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய இம்முறை பரீட்சை இடம்பெறும்என அறிவிக்கப்பட்டிருந்தது.

பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடத்தில் விதி முறைகளை மீறிய 229 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பரீட்சை பணியாளர் சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.