கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை – ஜுன் மாதம்

(FASTNEWS|COLOMBO) தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

2016 மற்றும் 2017 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.