(FASTNEWS|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை 22 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
20 கல்வியியல் கல்லூரிகளில் குறித்த பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்; பி பூஜித்த தெரிவித்தார்.